மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமை தொடர்பில் மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விசாரணை
கடந்த வருடம் நவம்பரில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமை தொடர்பில் பயங்கரவாதத் தடைப் பொலிஸார் நேற்று நண்பகல் கொக்குவிலில் உள்ள சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளருமான மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட இந்த விசாரணையில் அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து சென்றனர். நேற்று நண்பகல் கொக்குவிலில் உள்ள மணிவண்ணனின் வீட்டுக்குச் சென்று அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். கடந்த வருடம் நவம்பரில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமை தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.(15)




