Search
Saturday 18 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீண்டுடம் தலைதூக்கும் டெங்கு : 60,000ற்கும் மேல் பாதிப்பு – 85 பேர் உயிரிழப்பு

மீண்டுடம் தலைதூக்கும் டெங்கு : 60,000ற்கும் மேல் பாதிப்பு – 85 பேர் உயிரிழப்பு

நாட்டில் இந்த வருடத்தில் இது வரையான காலப்பகுதியில் 64,290 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேபோன்று இந்த வருடத்தில் இக் காலப்பகுதியில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்பொழுது நிலவும் பருவ பெயர்ச்சி காலநிலையை அடுத்து கொழும்பு, கம்பஹா, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நுளம்புகள் உள்ள இடங்களை துப்பரவு செய்வது தொடர்பில் பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *