Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீண்டும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மீது குற்றச்சாட்டு

மீண்டும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மீது குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல்கள் குறித்து கருத்துவெளியிட்டிருந்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவரை ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவினர் அழைத்துள்ளனர் என கிரிக்கெட் இணையத்தளமொன்று செய்தி வெளியி;ட்டுள்ளது.
சில நாட்களிற்கு முன்னர் பிரதியமைச்சர் அரசாங்கத்தின் பிணை முறி மோசடியை விட இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு;ச்சபையின் மில்லியன் டொலர் மோசடி மிகவும் மோசனமானது என தெரிவித்திருந்தது தொடர்பாகவே பிரதியமைச்சரை சந்திப்பதற்கான முயற்சிகளில் ஐசிசி ஈடுபட்டுள்ளது என இணையத்தளம் தெரிவித்துள்ளது
திறைசேரி பிணை முறி மோசடி ரூபாயில் இடம்பெற்றது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் மோசடி டொலரில் இடம்பெற்றுள்ளது என பிரதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாடடுச்சபை ஆட்டநிர்ணய சதி மற்றும் ஒலிபரப்பு உரிமைகள் தொடர்பில் ஊழலில் ஈடுபட்;டுள்ளது சில வீரர்களே இந்த தகவலை வழங்கியுள்ளனர் என பிரதியமைச்சர் தெரிவித்திருந்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *