Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி : சு.கவின் நிலைப்பாடு

மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி : சு.கவின் நிலைப்பாடு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக களமிறக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருப்பதாக அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஆனபோதும் இன்னும் ஜனாதிபதி தனது முடிவு தொடர்பாக அறிவிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்னும் காலம் இருப்பதால் அது தொடர்பாக இப்போதே குழப்பமடைய தேவையில்லையெனவும் முன்னரே தேர்தல் நடக்குமாக இருந்தால் அதில் தற்போதைய ஜனாதிபதியே போட்டியிடுவார் எனவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *