Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது

மீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது

19 மற்றும் 18ஆம் அரசியலமைப்பு திருத்தங்களை நீக்கி 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகின்றது.
19ஆவது திருத்தத்தில் காணப்படும் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான அதிகார பிரச்சினைகள் கடந்த ஆட்சிக் காலத்தில் இருவருக்கும் இடையிலான மோதல் நிலைமைக்கு கொண்டு சென்றிருந்த நிலையில் அந்த விடயம் தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தில் அவதானம் செலுத்தி அவ்வாறான நிலைமை ஏற்படாத வகையில் 17ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதுவரையில் 17ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *