Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மீன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்க வேண்டும் – தமிழ் தேசியப் பணிக்குழு கோரிக்கை

மீன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்க வேண்டும் –  தமிழ் தேசியப் பணிக்குழு கோரிக்கை

நல்லாட்சிக் காலத்தில் கிடைத்த எத்தனையோ சந்தர்ப்பங்களை சுயநல அரசியல் செயற்பாட்டால் தவறவிட்டவர்கள், சர்வதேச நெருக்கடிகளில் இருந்து அரசைப் பிணை எடுத்தவர்கள், ரணிலுக்குப் பதிலாக ராஜபக்சவுடன் இணைந்து மீண்டும் அதே பாதையில் பயணிக்கப் போவதாகக் கூறுபவர்கள் தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பினர். இவர்களால் இனியும் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை என தமிழ் தேசியப் பணிக்குழு இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் தேசியக் கட்சிகள், அரச ஆதரவுக் கட்சிகளிடம் அபிவிருத்தி மட்டுமே இருக்கிறது. கௌரவமான நிரந்தர அரசியல் தீர்வு அவர்களால் முடியாதது. அதனால், அமைதியான, நிம்மதியான வாழ்வுக்கு அவர்கள் வழி காட்ட மாட்டார்கள்.ஒரு நாடு இரு தேசம். கவர்ச்சியான கோசம். மக்களை உசுப்பேத்தும் சட்டத்துறை இளைஞர்கள். ஆனால் இலட்சியத்தை எப்படி வெற்றிகொள்வது என்கின்ற பாதைதான் அவர்களுக்கும் தெரியவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பின்னால் அணிதிரளும்படி கூற வலுவான காரணங்கள் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேசத்தின் கவனத்தை திருப்பக் கூடிய சில தலைவர்கள் இருக்கிறார்கள்.முன்னாள் போராளிக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள். மாகாணசபையில் சில நல்ல தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்கள்.அத்துடன் அரசியல் தீர்வுக்கு ஒரு சர்வஜன வாக்கெடுப்பைக் கோருகிறார்கள்.அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் வழங்க வேண்டும். எங்கள் தெரிவும் மீன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிதான் என ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *