Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முகக் கவசம் அணியாத 1200 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை

முகக் கவசம் அணியாத 1200 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை

மேல் மாகாணத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாது நடமாடிய 1280 பேர் பொலிஸாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதே இவர்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலைமை இன்னும் நாட்டிலிருந்து முற்றாக நீங்காத நிலையில் முகக் கவசம் அணிவது கட்டாயமானது என அறிவித்துள்ள பொலிஸார் அவ்வாறாக அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கையெடுப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *