Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முகக் கவசம் அணியாவிட்டால் இன்று முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு

முகக் கவசம் அணியாவிட்டால் இன்று முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களை இன்று முதல் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
இதன்படி இன்று முதல் நாடு பூராகவும் முகக் கவசம் அணியாதவர்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி மேல் மாகாணத்தில் பொது இடங்களில் 19,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் 6700 பேர் முகக் கவசம் அணியாது இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்தே இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *