Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முகமத் சமி குறித்த சந்தேகங்கள் தீவிரமடைகின்றன

முகமத் சமி குறித்த சந்தேகங்கள் தீவிரமடைகின்றன

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமத் சமி அவரது மனைவி தெரிவித்தது போல துபாயில் சில நாட்கள் தங்கியிருந்தது உண்மை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து அவர் தொடர்பான சர்ச்சை மேலும் தீவிரமாகியுள்ளது.
முகமது சமி தென்னாபிரிக்கா தொடர்ந்து முடிந்த பின்னர் உடனடியாக இந்தியா திரும்பவில்லை அவர் துபாய் சென்றார் அங்கு இங்கிலாந்து தொழில் அதிபர் கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டார் என சமியின் மனைவி ஹசின் ஜஹன் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
சமி பாக்கிஸடதான் மொடல் அழகியொருவருடன் தொடர்புவைத்திருந்தார் மற்றும் கிரிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்டார் எனவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சமி துபாயில் சில நாட்கள் தங்கியிருந்தது உண்மை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து சமி குறித்த விசாரணை தீவிரமாகியுள்ளது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *