Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முகமாலையில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று மீண்டும் அகழ்வுப் பணி

முகமாலையில்  எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று மீண்டும் அகழ்வுப் பணி

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது.முகமாலை பகுதியில் கடந்த வாரம் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால் விடுதலைப்புலிகளின் சீருடை, எலும்புக்கூடு மற்றும் துப்பாக்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

அதனையடுத்து, நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி அதாவது இன்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டார்.அதற்கமைய குறித்த பகுதியில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்கதக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *