Search
Monday 23 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முடங்கியது இயல்புநிலை வடக்கில் இன்று பூரண ஹர்த்தால்!

முடங்கியது இயல்புநிலை வடக்கில் இன்று பூரண  ஹர்த்தால்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகின்றது.அத்தியாவசியச் சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் பிரதான நகரங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு உணர்த்த முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் 19 அமைப்புகள் இணைந்து அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் நேற்று 40க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் அதற்கு ஆதரவு வழங்கின.
நாளை யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ள தமிழ்தின விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தனால், அத்தியாவசிய போக்குவரத்துச் சேவையைத் தவிர அனைத்துச் சேவைகளும் வடமாகாணத்தில் முடங்கியுள்ளன.(15)11708-1-da060891c286c8a7d1e861d605dfa09c 11708-2-da060891c286c8a7d1e861d605dfa09c


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *