Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முடிந்தால் என்னை நீக்கிக் காட்டுங்கள் : வசந்த சேனாநாயக்க சவால்

முடிந்தால் என்னை நீக்கிக் காட்டுங்கள் : வசந்த சேனாநாயக்க சவால்

தான் வெளிநாட்டு அலுவல்கள் இராஜங்க அமைச்சர் பதவியிலிருந்து விலக மாட்டேன் எனவும் முடிந்தால் தன்னை அந்த பதவியிலிருந்து விலக்கி காட்டுமாறும் இராஜங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியினருக்கு சவால் விடுத்துள்ளார்.
இராஜங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவரை இராஜங்க அமைச்சர் பதவியிலிருந்து விலக்குவதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்திருந்த நிலையிலேயே வசந்த சேனாநாயக்க இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
இன்று கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி வசந்த சேனாநாயக்க இவ்வாறு சவால் விடுத்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *