Search
Saturday 18 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முடிந்தால் போட்டியிடுவேன் ,முடியாவிட்டால் போய்விடுவேன் : என்கிறார் ரணில்

முடிந்தால் போட்டியிடுவேன் ,முடியாவிட்டால் போய்விடுவேன் : என்கிறார் ரணில்

இக்கட்டான நேரத்திலும் கட்சிக்கு தலைமைதாங்கி கட்சியை கட்டியெழுப்பியவன் என்ற ரீதியில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற முடியுமென்றால் அதில் போட்டியிடுவேன் எனவும் இல்லையேல் விலகி செல்ல தயார் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
70 வயது வரையில் தான் இலங்கை அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள நிலையில் தனக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது என்பது கஷ்டமான விடயே அல்ல, எவ்வாறாயினும் கட்சியின் தலைவர் என்ற வகையில் கட்சி தலைமையில் அமைக்கப்படவுள்ள கூட்டணியை வெற்றிப் பெறச் செய்ய வேண்டியது எனது கடமையாகும். இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இந்த பொறுப்பை நிறைவேற்ற முடியாது என்றால் வெளியேறி செல்வதில் பிரச்சினையில்லை. என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகையில் இன்றைய தினம் ஐ.தே.கவின் களனி மற்றும் பியகம தொகுதி உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *