Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முதுகெலும்பு இல்லாத தலைவர்கள் வீட்டுக்கு போய்விட வேண்டும் : போராயர் மெல்கம் ரஞ்சித்

முதுகெலும்பு இல்லாத தலைவர்கள் வீட்டுக்கு போய்விட வேண்டும் : போராயர் மெல்கம் ரஞ்சித்

ஏப்ரல் 21 குண்டு தாக்குதலானது சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்றால் போன்று நாட்டை ஸ்தீரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்வதற்கானதே என பேராயர் மேல்கம் ரஞ்சித் ஆண்டனை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 குண்டு தாக்குதலில் சேதமடைந்த கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை மீண்டும் இன்றைய தினம் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை. இது சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்றால் போன்று நாட்டை ஸ்தீரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்வதற்கானதே. இங்கு புலனாய்வு துறை பலமானதாக இருந்த போதும் அதனை பலவீனப்படுத்தியுள்ளனர். தற்போதைய தலைவர்களுக்கு எதுவும் முடியாது அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. இதனால் அவர்கள் விரைவில் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆட்சியை செய்யக் கூடியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் செல்ல வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *