Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முல்லைத்தீவில் ஜனாதிபதி தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி

முல்லைத்தீவில் ஜனாதிபதி தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளது. அந்தவகையில் எங்களுடைய மாவட்டத்தில் 135 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம் பெற உள்ளது. குறித்த வாக்கெடுப்பு நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்ற அதே வேளையில் வாக்கெண்ணும் பணிகள் 16ஆம் தேதி மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான 9 வாக்கெண்ணும் நிலையங்களுக்கு மாண அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் 15 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்திருப்பதாகவும் இதில் பாரதூரமான முறைப்பாடுகள் எவையும் இல்லை எனவும் அவை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.மேலும் தேர்தல் மற்றும் வாக்கெண்ணும் பணிகளுக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் பொலிஸ் தரப்பு ஊடாக மேற்கொள்வதற்கான ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கிறது. அதேவேளையில் எங்களுடைய மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 75 381 பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வாக்குப் பதிவு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் போது அதற்கு தேவையான அணியினரும் ஒழுங்கு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *