தலைப்பு செய்திகள்

முல்லைத்தீவு இரணைப்பாலை பகுதியில் புலிகளின் சீருடைகள் மீட்பு

முல்லைத்தீவு இரணைப்பாலை பகுதியில் புலிகளின் சீருடைகள் மீட்பு

முல்லைத்தீவு- இரணைப்பாலை குழந்தை யேசு ஆலய வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் அவற்றை மீட்டுச் சென்றுள்ளனர். இது இறுதி யுத்த காலப்பகுதியில் கடுமையான போர் நடைபெற்ற இடமாகும். இந்நிலையில் இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.சுற்று மதில் கட்டுமான வேலைக்கான அத்திவாரம் வெட்டிய போதே புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் சீருடைகள், சீருடைத் துணிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .(15)Mullai-uniform-211019-seithy (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *