Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட  வேலையற்ற பட்டதாரிகள்  இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர் இன்று காலை முதல் கொட்டும் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள்.2016ஆம் ஆண்டுக்கு மேல் பட்டம் முடித்த உள்வாரி நியமனத்தில் பாரபட்சம் பார்த்து எம்மை தவிர்த்தது ஏன்? பாரபட்சமான நியமனம் அரசு ஏன் வழங்கியது? அரச பதவியில் உள்ளவர்கள் அலட்சியமாக இருப்பது ஏன்? ஓட்டுப்போட ஓட்டை துளைத்து வந்த அரசு இப்ப ஓடி மறைவது ஏன்? பிரதமர் கொடுத்த பேட்டியில் 2016 க்கு மேல் உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி விட்டோம் அப்படி என்றால் அவர்கள் கணக்கில் நாங்கள் யார்? என்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மாணவர்கள் 48 மணிநேரத்திற்குள் உரிய பதில் எழுத்து மூலமாக வழங்கப்பட வில்லை எனில் தீக்குளிப்போம் என்று அரசுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.பட்டதாரிகள் நியமனத்தின் போது தங்களுடைய நியமனங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் இதுவரை வேலை வாய்ப்புகள் கிடைக்காதவர்களும் வெளிவாரி பட்டங்களை பெற்ற சிலரும் இந்த போராட்டத்தில் இணைந்து இருக்கின்றார்கள் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.2

தமது போராட்டத்திற்கான நிரந்தர தீர்வு கிடைக்காத பட்சத்திலும் 48 மணித்தியாலத்திற்குள் நிரந்தர தீர்மானம் இல்லையெனில் தீக்குளிப்போம் என்று தெரிவித்து பதாகைகளை தாங்கியவாறு குறித்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், திருச்செல்வம் ரவீந்திரன், ரத்தினம் ஜெகதீஸ்வரன், அண்டனி ரங்க, துசார காமினிதிசாநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *