Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முல்லைத்தீவு- முத்துஐயன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 மாணவர்கள் காயம்

முல்லைத்தீவு- முத்துஐயன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 மாணவர்கள் காயம்

முல்லைத்தீவு- முத்துஐயன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் நேற்று மாலை மோதி விபத்திற்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முத்துஐயன்கட்டு புனிதபூமிக்கு திரும்புகின்ற சந்திப் பகுதியில் குறித்த விபத்தநேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.இதன்போது, காயமடைந்த 7 மாணவர்களும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *