தலைப்பு செய்திகள்

முள்ளிவாய்க்கால் எங்களின் கொற்றவை  

முள்ளிவாய்க்கால் எங்களின் கொற்றவை  

கந்தகப் புகைக்குள்ளும்
கடும்குண்டு மழைக்குள்ளும்
வெந்துவேகி விழுப்புண் ஏந்தி
அஞ்சிடா நெஞ்சுரம் கொண்டு
துஞ்சிடா நாட்கள் பல கடந்த போதும்
வெஞ்சினத்தோடு வஞ்சகர்தமை எதிர்த்து -தம்
இனம்காக்க வீழ்ந்தவரை அணைத்த தாய்மடி!

மரணஓலங்களும் அவலக்குரல்களும்….
ஆருக்கும் கேட்காது அடக்கப்பட்ட மண்!
பிணக்குவியல்களுக்குள் குற்றுயிர்கள் குலுங்கிய போது
இற்றநெஞ்சங்கள் இறுகிப்போய்
வெற்றுப் பார்வையுடன் கடந்து செல்ல….
அன்று விழிநீர் சொரிந்து அழுத அன்னை !

சதைகளும் எலும்புகளுமாய் தமிழினம் சிதறிக்கிடக்க
பதைபதைத்தது நெஞ்சுவெடித்தவள்!
குருதிநீரில் குளித்துச் சிவந்து ….
இறுதிப்போரின் சாட்சியாய் என்றும் நிற்பவள்!
எதிரியை கிலிகொள்ளச் செய்யும் எங்களின் கொற்றவை -எம்
இலட்சிய உறுதிக்கு இவளே எப்போதும் உற்ற துணை !

– பிறேமலதா பஞ்சாட்சரம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *