Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

முஸ்லிம் அமைச்சர்கள் இன்னமும் தமது ராஜினாமா கடிதங்களை கையளிக்கவில்லை

முஸ்லிம் அமைச்சர்கள் இன்னமும் தமது ராஜினாமா கடிதங்களை கையளிக்கவில்லை

தமது பதவிகளை துறப்பதாக அறிவித்த 9 முஸ்லிம் அமைச்ச்ரக்ளும் இன்னமும் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளிக்கவில்லை என்று ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமது வாகனங்களை இன்னமும் இவர்கள் கையளிக்கவில்லை என்றும், அவர்களது பிரத்தியேக அலுவலர்களும் ராஜினாமா செய்யவில்லை என்றும் தெரிவித்த ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள், அவர்களுக்கான பாதுகாப்பும் எந்த மாற்றமும் செய்யப்பபடாமல் அப்படியே இருப்பதாகவும் தெரிவித்தன.

ஆனால், இது தொடர்பில் கருத்து தெரிவித்த பைசல் காசிம், தங்கள் கடந்த திங்கட்கிழமை ராஜினாமா கடிதங்களை கையளித்துவிட்ட்டதாக டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார். ஆனால், யாரிடம் கடிதங்களை கையளித்தீர்கள் என்று தமது ஊடகவியலாளர் கேட்பதற்கு எத்தனித்தபோது தொலைபேசியை துண்டித்துவிட்டதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இந்த அமைச்சர்களின் அமைச்சு செயலாளர்களை தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்றும் ஆனாலும், ரவூப் ஹக்கீம் வகித்த நகர திட்டமிடல், நீர் வழளங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சு , அமைச்சர் ஹக்கீம் இன்னமும் தனது ராஜினாமா குறித்து தமக்கு அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *