தலைப்பு செய்திகள்

முஸ்லிம் மக்களுக்கு நான் எதிரியல்ல: மகிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார்

முஸ்லிம் மக்களுக்கு நான் எதிரியல்ல: மகிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார்

“முஸ்லிம் மக்கள் மீதான எனது நிலைப்பாடு குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தாலும், பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன்சென்றவன் நான். பலபேர், என்னை இனவாதி என்று முத்திரை குத்தினர். எவ்வாறாயினும், முஸ்லிம் மக்களுக்கு நான் எதிரியல்ல என்பது அவர்களுக்குத் தெரியும்’ என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறினார்.

ஒட்டு மொத்த இணைந்த எதிர்க்கட்சியினரும் சிறையில் அடைக்கப்பட்டாலும் நாட்டு மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எந்த காரணத்துக்காகவும் பின்தள்ளப்படாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். மல்வான, உலஹிடிவலயில் இடம்பெற்ற முஸ்லிம்களின் தனிப்பட்ட கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இணைந்த எதிர்க்கட்சியில் உள்ள 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். முழு கூட்டு எதிரணியினரையுமே சிறையில் அடைத்தாலும், இணைந்த எதிரணி பின்தள்ளிப்போகாது’ என்றும்இதன்போது கூறினார்.

‘மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலம் தெரிவான பலர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் இருக்கும் அரசாங்கத்தின் பக்கம் சேர்ந்து கொண்டமையானது, மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மாறானதாகும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்தவர்களில், மக்களுக்காக குரல் கொடுக்க யார் இருக்கின்றார் என்று கேள்வி எழுப்பிய மஹிந்த ராஜபக்ஷ, தற்போது தனது புதல்வர்களில் ஒருவரை கைது செய்துள்ளது போன்று மற்றைய புதல்வரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தனக்கு தெரியும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், இவ்வாறான மிரட்டல்களின் மூலம் ஜனநாயகத்தை முன்னெடுத்துச்  செல்ல முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.

R-06


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *