Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மேலும் இரு மாணவர்கள் கைது

மேலும் இரு மாணவர்கள் கைது

சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், மேலும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் சியம்பலாண்டுவ மற்றும் கடான பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 22 வயதான இருவராகும்.

இவர்களை இன்று சியம்பலாண்டுவ மற்றும் மாலிகாகந்தை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற போராட்ட நடவடிக்கையின் போது, சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் மாணவக் குழுக்கள் சிலர் அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட சில மாணவர்கள் பொலிஸார் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேலும் இரண்டு மாணவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *