Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மைத்திரி – மகிந்த அணிகளின் இணைவில் முரண்பாடு

மைத்திரி – மகிந்த அணிகளின் இணைவில் முரண்பாடு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீ லங்க பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே கூட்டிணைவு தொடர்பாக பேச்சுவார்த்தை தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இரண்டு கட்சிகளையும் இணைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதற்கு குழுவொன்று முயற்சித்து வரும் நிலையில் பொதுஜன பெரமுன சார்பாக கோதாபய ராஜபகக்‌ஷவை களமிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதனாலேயே இரண்டு அணிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *