Search
Friday 19 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மைத்ரிபால ஸ்ரீசேனவே சு. கவின் ஜனாதிபதி வேட்பாளர்: நிமால் சிறிபால டி சில்வா

மைத்ரிபால ஸ்ரீசேனவே சு. கவின் ஜனாதிபதி வேட்பாளர்: நிமால் சிறிபால டி சில்வா

ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவே சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சரும் சுதந்திர கட்சி உப தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவை நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் சுதந்திர கட்சி மேற்கொள்ளும் என்றும் இதற்காக பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ வின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

சுதந்தர கட்சியின் புதிய செயலாளராக பதவி ஏற்றுள்ள முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவை வரவேற்கும் வகையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் தயாசிறி செயலாளர் பதவியை பொறுப்பேற்றுள்ளதாக கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *