தலைப்பு செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் மூதாட்டி ஒருவர் காயம்

மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் மூதாட்டி ஒருவர் காயம்

மிருசுவில், தவசிகுளத்தைச் சேர்ந்த சதாசிவம் நந்தினி ( வயது 65 ) என்ற மூதாட்டிமோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது தோட்டத்தில் விளைந்த மரக்கறிகளை பறிப்பதற்காக நேற்று அதிகாலை தோட்டத்திற்குச் சென்ற வேளையில் மோட்டார் சைக்கிள் மோதியதென உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த மூதாட்டி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *