Search
Tuesday 17 September 2019
  • :
  • :

மௌசூல் நகரில் மரணத்தையும் அழிவையும் விட்டுச்சென்றுள்ள ஐ.எஸ்

மௌசூல் நகரில் மரணத்தையும் அழிவையும் விட்டுச்சென்றுள்ள ஐ.எஸ்

சி. என் என் – தமிழில் சமகளம் 

மௌசூலின் பழைய நகரத்திற்குள் நுழையும்போது வெறும் அசுத்தமான வாடை மாத்திரமே எஞ்சியிருப்தை உணரமுடிகின்றது.

அங்கு வெயில் 43 பாகையாக காணப்படுகின்றது. அனைத்து கட்டிடங்களுமே தரைமட்டமாகியுள்ளன தொடர்ச்சியான வெடிகுண்டு சத்தங்களை கேட்க முடிகின்றது.

எனினும் மரணத்தின் வாடையையே அதிகளவிற்கு உணரமுடிகின்றது. அங்கு பாருங்கள் என பயங்கரவாத விசேட படையணியை சேர்ந்த ஓருவர் சுட்டிக்காட்டுகின்றார்- அந்த இடத்தில் ஐஎஸ் தீவிரவாதியின் உடல் ஓன்றை காணமுடிகின்றது. பல நாட்கள் வெயிலில் அந்த உடல் கிடந்திருப்பது அதனை பார்த்தவுடன் தெரிகின்றது. இடிபாடுகளிற்குள் மேலும் பல உடல்கள் சிதைவடைந்து அழுகிய நிலையில் காணப்படுகின்றன.

170628143822-02-mosul-0628-super-169
ஈராக்கில் ஐஎஸ் இன் பெருமைக்குரிய நகரத்தில் அந்த அமைப்பிற்கு இவையே எஞ்சியிருக்கின்றன-இறந்தவர்களின் உடல்கள்-சிறிய பகுதி – 200 தீவிரவாதிகள்.

ஐஎஸ் அமைப்பின் மீதான இறுதி தாக்குதலிற்கு முன்னர் ஈராக்கிய தளபதிகள் சிஎன்என் செய்தியாளரை மௌசூலின் பழைய நகரிற்கு அழைத்துச்சென்றனர்.

ஈராக்கின் விசேட படையணியினால் பயன்படுத்தப்படும் வீட்டின் கூரையிலிருந்து பார்த்தவேளை நகரத்தை அழித்து தரைமட்டமாக்கும் ஐஎஸ் அமைப்பி;ன் கொள்கை காரணமாக என்ன விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை உணரமுடிந்தது.

12 ம் நூற்றாண்டை சேர்ந்த அல் நூரி மசூதியின் சிதைந்த கட்டிடங்களை காண முடிந்தது.ஓரு வாரத்திற்கு முன்னரே தீவிரவாதிகள் அதனை தரைமட்டமாக்கியிருந்தனர்.

மசூதி அழிக்கப்பட்டதற்கு அமெரிக்காவே காரணம் என ஐஎஸ் குற்றம்சாட்டியிருந்தது. ஈராக்கிய படையினர் விரைவில் ஈராக்கிலிருந்து ஐஎஸ் அமைப்பை விரட்டியடித்துவிடுவார்கள் ஆனால் கலிபாவை பிரகடனம் செய்வதற்காக ஐஎஸ் தலைவர் அந்த மசூதியை பயன்படுத்தியதன் மூலம் அந்த மசூதிக்கு ஐஎஸ் அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட களங்கத்தை அகற்ற முடியாது.

before-after.jpg.size.custom.crop.850x638

மொசூல் நகரம் கைப்பற்றப்படுவதற்கு முன்னரும் பின்னரும் காணப்படும் அந்த நகரத்தின் பிரபல்யம்மிக்க பள்ளிவாசல் கோபுரமான அல் – ஹாபாப . தற்போது இந்த கோபுரத்தை இழந்து சோபை இன்றி காணபப்டும் மொசூல் நகரம். 

ஐஎஸ் அமைப்பை ஈராக்கிலிருந்து அகற்றுவதற்கான மோதலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் ஐஎஸ் வளர்ச்சிக்கு காரணமான மதத்திற்குள்ளான மோதலை தணிப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மௌசூலிற்கான மோதல் அதன் இறுதி நாளை நெருங்கும் இந்த தருணத்தில் கொள்கை மோதலை தணிப்பதற்கு எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.

ஐஎஸ் அமைப்பின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மௌசூலின் மக்களின் மன உறுதியை கண்முன்னால் பார்க்க முடிகின்றது. பழைய நகரத்தின் கட்டிடங்களிற்கு இடையில் வாழ்க்கை மீண்டும் துளிர்ப்பதை காண முடிகின்றது.

ஈராக் தற்போது தனது இறுதி தாக்குதலிற்காக திட்டமிட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் சமாதானம் என்பது வெகு தூரத்திலேயே இருப்பதை உணரமுடிகின்றது.

170628144111-04-mosul-0628-super-169


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *