Search
Monday 20 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யட்டியாந்தோட்டையில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு தமிழ் மக்கள் மீது குண்டர்கள் தாக்குதல்

யட்டியாந்தோட்டையில்  யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு தமிழ் மக்கள் மீது குண்டர்கள் தாக்குதல்

கேகாலை மாவட்டம் யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது குண்டர்களினால் தாக்குதல் ஒன்று இன்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எட்டியந்தோட்டை கணேபல்ல தோட்டதிற்குள் இன்று இரவு நுழைந்த கும்பல், அங்குள்ள தமிழ் மக்களின் சில வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர்.அங்குள்ள சில பெண் பிள்ளைகளிடம் அநாகரிகமாக அந்த கும்பல் நடக்க முயற்சி செய்ததாக கனேபல்ல பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

யாருக்கு இம்முறை வாக்கு அளித்தீர்கள் என்று கேட்டு மிகவும் அநாகரிகமாக குறித்த கும்பல் செயற்பட்டதாக தெரிவிக்கின்றன.இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த கனேபல்ல மக்கள், எட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.(15)2 3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *