Search
Friday 22 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாரை ஆதரிப்பது? : தமிழ் கட்சிகள் இறுதி தீர்மானமில்லை

யாரை ஆதரிப்பது? : தமிழ் கட்சிகள் இறுதி தீர்மானமில்லை

ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகும் வரையில் இறுதித் தீர்மானங்களை எடுக்காது காத்திருப்பதற்கு 5 பிரதான தமிழ் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 5 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளைய தினத்தில் தபால் மூல வாக்களிப்புகள் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் தமது வாக்கு உரிமைகளை விட்டுக்கொடுக்காது விரும்பியவருக்கு வாக்களிக்கலாம் என கூறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட எம்.பிக்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் , ரெலோ செயலாளர் சிறீகாந்தாவும் , தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் அருந்தவபாலனும் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *