Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்

யாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட  மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்

சீன பிரதமர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னதாக, இந்திய கடற்படை பாக்கு நீரிணையில் சரமாரியான கைதுகளை மேற்கொண்டது. இந்தியாவிற்குள் ஊடுருவலாமென்ற சந்தேகத்தில், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 18 யாழ்ப்பாண மீனவர்கள் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.இதனை கண்டித்தும் அவர்களை உடன் விடுவிக்க வலியுறுத்தியும் நாளை யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

அதற்கமைய நாளை புதன்கிழமை இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள்இதனை தெரிவித்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *