Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் மாநகர சபை உறுப்பினர் வீட்டில் கோத்தாபய ஆதரவாளர்கள் அடாவடித்தனம்

யாழ்  மாநகர சபை உறுப்பினர் வீட்டில்  கோத்தாபய ஆதரவாளர்கள் அடாவடித்தனம்

நள்ளிரவில் தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.நேற்று இரவு கோத்தாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீடுகளின் மதில்களில் ஒட்டிவந்தனர். அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் மாநகர சபையின்வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட முற்பட்டபோது குறித்த உறுப்பினர் தடுத்துள்ளார்.இந்நிலையில் தடுத்த மாநகர சபை உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவின் ஆதரவாளர்கள் மிரட்டியதுடன் , நள்ளிரவில் வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்டி சென்றுள்ளனர்.சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் 50 – 5048 எனும் இலக்கமுடைய வெள்ளை நிற ஹைஏஸ் ரக வாகனத்தில் வந்தே சுவரொட்டிகளை ஒட்டி சென்றனர் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் நான் அவர்களுக்கு மரியாதையாகத்தான் கூறினேன், சுவரொட்டிகளை எனது வீட்டு மதிலில் ஒட்ட வேண்டாம் என்று. ஆனால் அவர்கள் அதிகார வெறியுடன் செய்து காட்டுவோம் என்ற மிரட்டல் பாணியுடன் யாரும் இல்லாத பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.Jaffna-slpp-poster-081019-seithy (1)

தேர்தல்காலம் என்றால் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள்தான். ஆனால் ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற வகையில் உரிமையுடன் எனது வீட்டு மதிலில் ஒட்ட வேண்டாம் என்று மரியாதையாக சொன்னபோதும் யாரிடம் கேட்கவேண்டும் ஒட்டுவதற்கு என்று மிரட்டிவிட்டு சென்று விட்டு பின்னர் பின்னிரவு வேளையில் மீண்டும் வந்து சுவரொட்டிகளை ஒட்டியது அவர்களின் அதிகார வெறியினை வெளிப்படுத்தி நிற்கின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னர் நடைபெற்ற ஏதேட்சைத்தனமான அதிகார வெறியுடனான கொடுங்கோல் ஆட்சிமுறையினையே நாம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொண்டு வருவோம் என்ற செய்தியையா இவர்கள் இச் செயல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.Jaffna-slpp-poster-081019-seithy (3)

அத்துடன் சுவரொட்டிகளையும் அதிகாரத்துடனும் மிரட்டல் பாணியுடனும் மீண்டும் ஒட்டுவதற்கு முயற்சித்தனர்.இருப்பினும் அதற்கு நான் அனுமதி வழங்காதன் காரணமாக அது பெரும் வாய்தர்க்கமாக மாற அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டாமல் சென்று விட்டனர்.ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை காலை எனது வீட்டு சுவர் முழுவதும் மட்டும் இன்றி வீட்டு கேற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்பட்டன என தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *