Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் அதிக அளவு தேசிய பாடசாலைகள் இருந்தும் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது-நாமல்

யாழில் அதிக அளவு  தேசிய பாடசாலைகள் இருந்தும் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது-நாமல்

யாழ்ப்பாணத்தில் அதிக எண்ணிக்கையான தேசிய பாடசாலைகள் இருந்த போதும், தற்போது கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பல குடும்பங்கள் கடன்பிரச்சினைகளால் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.கடன் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, ஏனைய விடயங்களில் அவதானம் செலுத்த முடியாது.எனவே பொருளாதார பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இங்குள்ளவர்களுக்கு தொழில்வாய்பு வழங்கப்பட வேண்டும். பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.ஆனால் மக்களுக்கு தேவையான எதனையும் வடக்கு கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றில் கதைப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்துக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை நடத்தி இருந்தார்.இதன்போதே குறித்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட யுத்தத்தினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கிலும் அந்த நிலைமையே உள்ளது என தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *