Search
Friday 25 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் ஆரம்பிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் சமூக நல்லிணக்கத்திற்கான பயணம் அம்பாறையை சென்றடைந்தது

யாழில் ஆரம்பிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் சமூக நல்லிணக்கத்திற்கான பயணம் அம்பாறையை சென்றடைந்தது

கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய இனங்களைச் சேர்ந்த மூன்று மாற்றுத் திறனாளிகள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகளின் 06 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சக்கர நாற்காலியில் இலங்கையை சுற்றிவரும் மாற்றுத்திறனாளிகள் நேற்று அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தை வந்தடைந்தனா்.மாற்றுத் திறனாளிகளான நாம் சமூக நல்லிணக்கம் வேண்டியும், எம்மைப்போன்று நாடு முழுவதிலுமுள்ள மாற்றுதிறனுடையோரின் சிறப்பான எதிர்காலம் குறித்து ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் சக்கர நாற்காலியில் வலம் வந்து கொண்டிருக்கின்றோம் என இதன் போது தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் இருவரும் தமது பயணத்தை சக்கர நாற்காலியூடாக யாழ்ப்பாணத்லிருந்து கொழும்பு சென்று அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளனா். இதன் பின்னா் காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் அம்மாந்தோட்டை, மொனராகல ஊடாக பொத்துவிலில் இருந்து இன்று அம்பாறை அட்டாளைச்சேனையை வந்தடைந்துளளனர்.இவர்களை, பொது மக்கள், இளைஞர்கள், சிவில் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் சந்தித்து வரவேற்று ஆதரவு தெரிவித்துவருவதுடன் அவர்களுக்கான உதவிகளையும் வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *