Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் ஆல­யங்­க­ளுக்­குச் சென்று வீடு திரும்­பி­ய­வர்கள் நகை­க­ளைப் பறி­கொ­டுத்­தனர்

யாழில் ஆல­யங்­க­ளுக்­குச் சென்று வீடு திரும்­பி­ய­வர்கள்  நகை­க­ளைப் பறி­கொ­டுத்­தனர்

தீபா­வளி வழி­பாட்­டுக்கு நேற்­றுக் காலை ஆல­யங்­க­ளுக்­குச் சென்று வீடு திரும்­பி­ய­ வர்­கள் நகை­க­ளைப் பறி­கொ­டுத்­த சம்பவம் நேற்று யாழில் இடம்பெற்றுள்ளது.திரு­நெல்­வேலி சிவல் ஆல­யத்­தில் தீபா­வளி வழி­பா­டு­களை முடித்து வீடு திரும்­பிக் கொண்­டி­ருந்த பெண்­ணி­டம் 3 பவுண் சங்­கி­லியை அறுத்­துக் கொண்டு இளை­ஞர் ஒரு­வர் தப்­பித்­துச் சென்­றுள்­ளார்.மேலும் கல்­வி­யன்­காடு பேச்­சி­யம்­மன் ஆலய வழி­பா­டு­களை முடித்து கால் நடை­யாக வீடு திரும்­பிக் கொண்­டி­ருந்த பெண்­ணின் 13 பவுண் தாலிக் கொடியை, உந்­து­ரு­ளி­யில் வந்த இரு இளை­ஞர்­கள் அறுத்­துச் சென்­றுள்­ள­னர்.

ஆலய வழி­பாட்­டுக்­குச் செல்­வ­தற்­காக கொக்­கு­வில் பகு­தி­யில் சென்று கொண்­டி­ருந்த மூதாட்­டியை உந்­து­ரு­ளி­யில் வந்த இளை­ஞர்­கள் தள்ளி விழுத்­தி­னர்.அவர் அணிந்­தி­ருந்த 2 பவுண் தங்­கச் சங்­கி­லியை அறுத்­துக் கொண்டு தப்­பிச் சென்­றுள்­ள­னர்.குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *