Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் இடம்பெற்ற நவாலி படுகொலைகளின் 24 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யாழில் இடம்பெற்ற நவாலி படுகொலைகளின் 24 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதி யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் மீது இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 150-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 350 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.இந்நிலையில் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில், விமான தாக்குதலின் மூலம் 150இற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்ட 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இடம்பெற்றது.

சென். பீற்றர்ஸ் தேவாலய பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.(15)navali-memo-100719-seithy (1)navali-memo-100719-seithy (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *