Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் இராணுவம் ரோந்து நடவடிக்கையில்

யாழில் இராணுவம் ரோந்து நடவடிக்கையில்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதிகளிலும் வடமராட்சியின் சில பகுதிகளிலும் நேற்றுக் காலையில் உலாவிய மோட்டார் சைக்கிள் படையணியினர் மாலையில் யாழ் நகரின் பலாலி வீதி , காங்கேசன்துறை வீதிகளின் ஊடாக நகரின் மையப் பகுதிக்குள் உலாவினர். ஆயுதம் தாங்கிய படையினரே இவ்வாறு வலம் வந்தனர்.இதேவேளை இன்று காலையும் வடமராட்சியில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்துள்ள பகுதி மற்றும் வடமராட்சி மாவீரர் துயிலுமில்லப்பகுதியில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதோடு இளைஞர்களிடம் அடையாள அட்டைப் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

இன்று தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமும் நாளை மாவீரர் நாளும் என்பதனாலேயே மேற்படி படையினர் நீண்ட காலத்தின் பின்னர் நடவடிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.மேலும் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் படையணியினர் நேற்று முதல் குடாநாட்டின் நகரப் பகுதி மற்றும் தென்மராட்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதனால் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவியமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *