Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் இராணுவ முகாம்களுக்குள் திருட முயன்றவர்களுக்கு விளக்கமறியல்

யாழில் இராணுவ முகாம்களுக்குள் திருட முயன்றவர்களுக்கு விளக்கமறியல்

காங்கேசன்துறை தையிட்டி பகுதியிலுள்ள இராணுவமுகாமுக்குள் புகுந்து இரும்புகள் உள்ளிட்ட பொருட்களை திருட முற்பட்டார்கள் என குற்றச்சாட்டின் பேரில் இருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்தனர். அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.அதனை அடுத்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை காங்கேசன்துறையில் இராணுவத்தினரால் நடத்தப்படும் “தல்செவன” விருந்தினர் விடுதி , அதனை அண்டிய உல்லாச கடற்கரை பகுதிக்கு வருவோரின் உடமைகளை திருடி வந்தார் எனும் குற்றசாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *