Search
Thursday 17 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் இருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ கஞ்சா வவுனியா பொலிசாரால் மீட்பு

யாழில் இருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ கஞ்சா வவுனியா பொலிசாரால் மீட்பு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட 8கிலோ கேரளா கஞ்சா வவுனியா நகரில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழிநடத்தலில் வவுனியா வலய பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோவின் ஆலோசனையில் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவராச்சியின் கண்காணிப்பில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ். ஜ. சுபசிங்க மற்றும் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து கொழும்பிற்கு பொதி செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 8கிலோ கேரளா கஞ்சாவினை வவுனியா நகரில் வைத்து கைப்பற்றப்பட்டதுடன், அதனை கொண்டு சென்ற கொழும்பை வசிப்பிடமாக் கொண்ட 54 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாகவும், தெரிவித்துள்ள வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *