Search
Saturday 4 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு

யாழில்  கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு

யாழ் விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் நேற்று யாழ். நகர் பகுதிகளில் உள்ள கடற்தொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இதன்போது ஒரு கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 30 கிலோ தங்கூசி வலையும் மற்றைய கடையில் இருந்து சுமார் 330 கிலோ தங்கூசி வலையும் மீட்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து கடை உரிமையாளர்கள் இருவரையும் விசேட பொலிஸ் அதிரடி படையினர் கைது செய்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுடன், மீட்கப்பட்ட வலைகளையும் ஒப்படைத்தனர்.மேலும் யாழில் உள்ள கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *