நேற்றைய தினம் நடந்து முடிந்த 8ஆவது ஜனாதிபதி தோதலின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் முடிவுகள் நள்ளிரவு முதல் இன்று மாலை வரை வெளியாகியிருந்தன.வெளியாகிய தேர்தல் முடிவுகளின் படி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளால் அமோக வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தே யாழில் கோட்டாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அது மட்டுமன்றி மேளதாளங்களுடன் ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம் செய்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.மேலும் ஐனாதிபதி தேர்தலிலில் கோட்டாபய ராஐபக்ச வெற்றி பெற்றமையால் யாழிலுள்ள அக்கட்சியினர் வெடி கொழுத்தி கொண்டாடியதுடன், வீதியால் சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கியுள்ளனர்.(15)