Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் தாயாருடன் முரண்பாடு வயது 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கி உயிரிழப்பு

யாழில் தாயாருடன் முரண்பாடு வயது 12 வயது  சிறுவன் தூக்கில் தொங்கி உயிரிழப்பு

பூமாலை கட்டும் பொழுது சகோதரிக்கும், இளைய தம்பியான குறித்த சிறுவனுக்கும் இடையில் முரண்பாடு காரணமாக சகோதரிக்கு இடையூறு விளைவித்த சிறுவனை தாயார் அடித்துள்ளார்.இந்நிலையில் சிறுவனை நீண்ட நேரமாக காணாத நிலையில் உறவினர்கள் சென்று தேடி பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.இதனையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை மாற்றப்பட்டுள்ளார்.எனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி அதிகாலை உ யிரி ழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக நிலையை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவத்தில் பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த அசோக் ரவி ரஹிம்சன் (வயது 12) என்ற சிறுவனே உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *