Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் திடீரென அதிகரிக்கப்பட்ட சோதனைச் சாவடிகள்

யாழில் திடீரென அதிகரிக்கப்பட்ட சோதனைச் சாவடிகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் திருவிழா நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு நல்லூர் ஆலய சூழலில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கொழும்பிலிருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கொழும்புத்துறை பிரதான வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதித் தடை போடப்பட்டு சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றன. சோதனையிடப்படுவோரின் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றது.மேலும் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றன.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *