Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் ஆவா குழு முக்கியஸ்தர்கள் கைது

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் ஆவா குழு முக்கியஸ்தர்கள் கைது

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று அதிகாலை 3 மணியளவில் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து வான் உட்பட வாள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.கைதுசெய்யப்பட்ட 11 இளைஞர்களும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.விசாரணைகளின் பின்னர் 11 பேரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட 11 பேரும் சுமார் 22 வயது முதல் 24 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் வேன் ஒன்றில், 6 வாள்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 11 பேரில் இரண்டு பேர் ஆவா குழுவில் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும் அஞ்சித் ஆகியோருடன், ஏனைய 9 இளைஞர்களும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *