Search
Tuesday 19 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் நூதன முறையில் இறைச்சி கடத்திய இரு இளைஞர்கள் கைது

யாழில் நூதன முறையில் இறைச்சி கடத்திய இரு இளைஞர்கள் கைது

ஊர்காவற்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பசு மாட்டினை திருடி வெட்டி, அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இதன் போது நூதன முறையில் ஒலி பெட்டிக்குள் இறைச்சி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீட்டனர்.

இறைச்சியை மீட்ட பொலிஸார் இரு இளைஞர்களையும் பொலிஸார் போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் யாழ்.பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *