Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் பரிசோதனைக்கு உட்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

யாழில் பரிசோதனைக்கு உட்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த  பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 39 வயதுடைய குடும்பப் பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போதுவரை 74 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.குறித்த பெண்கள் உட்பட 22 பேர் புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனை மூலம் இந்த முடிவு கிடைத்துள்ளது.நேற்றைய தினம் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த இருவர் விடுமுறையில் திரும்பியிருந்த நிலையில் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *