Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் பூரண கதவடைப்பு போராட்டம்

யாழில் பூரண கதவடைப்பு போராட்டம்

தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழின் பிரதான சந்தைகள் எவையும் இன்று திறக்கப்படவில்லை என்பதோடு, யாழ்ப்பாணத்திற்கான பிரதான காய்கறி விநியோக சந்தைகளான மருதனார்மடம், திருநெல்வேலி சந்தைகளும் பூட்டப்பட்டுள்ளன.மேலும் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் அரச, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்பதோடு, தூர பிரதேச தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்கள் வழமைபோன்று இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.Jaffna-3-384x288

இதேவேளை பாடசாலைகள் வழமை போன்று இயங்குவதாகவும் எனினும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் அரச, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்பதோடு, தூர பிரதேச தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபடுவதை காணக்கூடியதாகவுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *