Search
Tuesday 21 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் பெரும் அச்சுறுத்தலாகியிருக்கும் குளவிகளின் தாக்குதல்

யாழில் பெரும் அச்சுறுத்தலாகியிருக்கும் குளவிகளின் தாக்குதல்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். அத்துடன், நூற்றுக் கணக்கானோர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.குளவிக் கூடு கலைந்தால் குளவிகள் மனிதர்களை நீண்ட தூரம் துரத்திச் சென்று தாக்கும் என வனவள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்தக் குளவிகள் கொட்டினால் ஒவ்வாமை (allergies reactions) கொண்டவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக மரம் ஒன்றில் கட்டியுள்ள குளவிக் கூடு நேற்றுமுன்தினம் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கலைந்ததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 50 பேர்வரை குளவிக் கொட்டுக்கு உள்ளாகினர்.அவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஏனையோர் உள்ளூரில் தனியார் மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். அத்துடன், நூற்றுக் கணக்கானோர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர்.குறித்த சம்பவங்களால் மக்கள் மத்தியில் குளவிகள் தொடர்பில் ஒருவித அச்சநிலை ஏற்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *