Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் பௌத்த மயமாக்கலைக் கண்டித்து அமைதிப் போராட்டம்

யாழில் பௌத்த மயமாக்கலைக் கண்டித்து அமைதிப் போராட்டம்

இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் இன்று சனிக்கிழமை காலை நல்லை ஆதீனம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமீப கால­மாக வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யகப் பகு­தி­களில் அமைந்­தி­ருக்கும் இந்து ஆல­யங்­க­ள் அழிக்­கப்­பட்டும் உடைக்­கப்­பட்டும் வரு­கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பௌத்­தர்கள் வாழாத பிர­தே­சங்­களில் விகா­ரைகள் அமைப்­பதனூடாக இலங்கையிலுள்ள இந்துக்கள் அச்­சத்தில் மூழ்­க­ வேண்­டி­ய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளரான அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.இந்த அதர்ம செயல்­க­ளைக்­ கண்­டித்தும் மத நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம­சுந்­தர பிர­மச்­சா­ரிய சுவா­மிகள் தலை­மையில் இந்து அமைப்­புகள் ஒன்­றி­யமும் இந்­து­ சமயப் பேர­வையும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *