தலைப்பு செய்திகள்

யாழில் வெடி கொளுத்தியவர் கண்ணையும் கையையும் இழந்தார்

யாழில் வெடி கொளுத்தியவர் கண்ணையும் கையையும்  இழந்தார்

யாழ் பருத்தித்துறை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மரண சடங்கின் போது , பூதவுடலை எடுத்து செல்லும் போது வெடிகள் கொளுத்தப்பட்டன. அதன் போது குறித்த நபர் மூல வெடிகள் சிலவற்றை ஒன்றாக இணைத்து கொளுத்திய போது அது கைகளுக்குள் வெடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த நபரை அங்கிருத்தவர்கள் மீட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சையின் ஒரு கை மணிக்கட்டின் கீழ் சிதவடைந்தமையால் அதனை வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றினார்கள். அத்துடன் இரு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதில் ஒற்றைக் கண் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாகவும் , கண்ணுக்கான சிகிச்சைகளை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த யோகராஜா ராஜஜோதி (வயது 33) என்பவரே கையும், கண்ணையும் இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *