Search
Tuesday 21 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

யாழில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் நகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா மஹிந்த ராஜபக்சவின் காலத்திலேயே நாட்டில் உள்ள 25,000 கிராமங்களிலும் உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களுக்கு சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் கேட்டு அறிந்து அவற்றைத் தீர்த்து வைப்போம் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த செய்தி விக்னேஸ்வரனின் வருகையின் பின்னரே அவை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.அத்துடன் தற்போதுள்ள அரசாங்கம் ஹோட்டல்களையும் தமக்கான கட்டிடங்களையும் நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தமது ஆட்சி காலத்திலேயே வீதிகள் காப்பற்றாக மாற்றப்பட்டதாகவும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப் பட்டதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா மஹிந்த ராஜபக்சவின் காலத்திலேயே நாட்டில் உள்ள 25,000 கிராமங்களிலும் உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களுக்கு சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் கேட்டு அறிந்து அவற்றைத் தீர்த்து வைப்போம் எனவுடூம் தெரிவித்தார்.அத்துடன் இன்று நாம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருப்பது நமது கட்சி உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே தமது வருகை அமைந்துள்ளதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *