யாழ்ப்பாண மறைமாவட்ட மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க சமயத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , மத ரீதியான பிரச்சினைகளை எவ்வாறு தீர்வுக்குக் கொண்டுவரமுடியும் என்பது தொடர்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று முற்பகல் இடம்பெற்றது.
வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட எஞ்சியுள்ள மக்களின் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் இந்தச் சந்திப்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என்று ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.(15)